சுசிகணேசனால் நானும் பாதிக்கப்பட்டேன்: அமலாபால்

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (14:08 IST)
பாடகி சின்மயி ஆரம்பித்து வைத்த மீடூ பிரச்சனை முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.
 
இந்த நிலையில் 'திருட்டுப்பயலே' இயக்குனர் சுசிகணேசன் மீது சமீபத்தில் கவிஞரும் அந்த படத்தின் துணை இயக்குனருமான லீலா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார் என்பது தெரிந்ததே. அவர் மீது ரூ.1 மான நஷ்ட வழக்கையும் சுசிகணேசன் பதிவு செய்துள்ளார்.
 
இந்த நிலையில் 'திருட்டுப்பயலே' படத்தின் நாயகி அமலாபாலும், சுசிகணேசன் மீது  மீடூ குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியபோது, ' இயக்குனர் சுசிகணேசனின் இரட்டை அர்த்த தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்துள்ளேன். இதை வைத்து அந்த படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த லீலா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பது எனக்கு புரிகிறது என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். அமலாபாலின் இந்த குற்றச்சாட்டால் சுசிகணேசன் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்