காதலில் விழுந்த அமலா பால்... நேசிப்பில் இது ஒரு வகை !

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:27 IST)
நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டிவாக இருப்பவர்.  அவருக்குத் தற்போது இரண்டு படங்கள் மட்டுமே அவரது கைவசம் உண்டு. இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதால் பலரும் இவரது பதிவுகளுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் அவர் வேஷ்டி கட்டிய ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்த நிலையில், தனது மற்றொரு பதிவில் இப்படி குறிப்பிட்டுள்ளார் அவர், அந்த நிலா வெளிச்சத்தில் ஒரு முழு நிலவான அவள் தன் மீதே காதலில் விழுந்து விட்டதை அவள் உணர்ந்துகொண்டாள் என தன்னைக் குறித்து பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பலரும் லைக் செய்து வருகின்றனர். குறிப்பாக அமலா பால் தன்னை தானே நேசிக்கும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்து.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்