அதிக தோல்வி படங்களை கொடுத்தது நான்தான்; ஒப்புக்கொண்ட அஜித்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (19:30 IST)
அஜித் நடித்த விவேகம் படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி வெளியான இருக்கும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அஜித், அதிக தோல்வி படம் கொடுத்தது நான்தான் என கூறியுள்ளார்.


 

 
பில்லா படத்திற்கு அஜித் சினிமா வாழ்க்கையே மாறிபோனது. அதன்பின் ரசிகர்களின் எண்ணிக்கை கூடியது. தல என்ற தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் அஜித் நடித்த விவேகம் அடுத்த மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 
படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களை நல்ல வரவேற்பை பெற்றது. அஜித் - சிவா கூட்டணி தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த நிலையில் தற்போது மூன்றாவது படம் வெளிவர உள்ளது. இந்நிலையில் வெகு நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஜித் கூறியதாவது:-
 
தற்போது இருக்கும் நடிகர்களில் அதிக தோல்வி படம் கொடுத்தது நான்தான். அதற்காக என் ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இனி நான் நடிக்கும் படங்கள் என் ரசிகர்களுக்காக மட்டும் தான் என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்