பிரபல நடிகையின் ஆடையை மிதித்த அக்‌ஷய்குமார்

Sinoj

வியாழன், 28 மார்ச் 2024 (20:21 IST)
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார்.
 
இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவாக நடித்த, ஷங்கர் இயக்கிய 2.o  படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
 
தற்போது, சூர்யா தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், இறுதிச் சுற்று படத்தில் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
 
அதேபோல் பேட் மியான் சோட்டே மியான் என்ற படத்தில் நடித்திருக்கும் அக்‌ஷய்குமார், மும்பையில் இப்பட ஆடியோ ரிலீஸ் விழாவில் பங்கேற்றார். அவருக்கு அருகில் இந்தி நடிகை ஆல்யா நின்றிருந்தார்.
 
அவர் அணிந்திருந்த நீளமான ஆடை தரையில் சரிந்து கிடந்தது. அந்த அடையை கவனிக்காமல் அக்‌ஷய்குமார் மிதித்தபடி நின்றிருந்தார்.
 
இதனால் ஆல்யாவால் சில நிமிடங்கள் நகரமுடியவில்லை.  ஆனால், அக்‌ஷய்குமார் அந்த ஆடையில் நின்றபடி மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் மீது விமர்சனம் குவிந்து வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்