கன்னடத்தில் அறிமுகமாகும் அக்ஷரா ஹாசன்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (17:56 IST)
அஜித்துடன் ‘விவேகம்’ படத்தில் நடித்திருக்கும் அக்ஷரா ஹாசன், கன்னடத்தில் அறிமுகமாக இருக்கிறார்.
 


 

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர், கமலின் இளைய மகளான அக்ஷரா ஹாசன். எனவே, இவரும் இயக்குனராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்காவைப் போல நடிகையாகிவிட்டார். பாலிவுட்டில் அமிதாப் பச்சனுடன் இணைந்து ‘ஷமிதாப்’ படத்தில் நடித்த அக்ஷரா, தற்போது அஜித்துடன் ‘விவேகம்’ படத்தில் நடித்து வருகிறார். இதுதான் தமிழில் இவர் அறிமுகமாக இருக்கும் படம்.

இந்நிலையில், கன்னடத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். கன்னட நடிகர் ரவிச்சந்திரன் மகன் விக்ரம் ரவிச்சந்திரன் நடிக்கும் படத்தில், அக்ஷரா தான் ஹீரோயின். இதன்மூலம், மூன்றாவது மொழியில் தன்னுடைய அறிமுகத்தை நிகழ்த்தப் போகிறார் அக்ஷரா ஹாசன்.
அடுத்த கட்டுரையில்