ஆங்கிலத்தில் அஜித்தின் ‘ஆலுமா டோலுமா’

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (14:46 IST)
அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘ஆலுமா டோலுமா’, ஆங்கிலத்தில் தயாராகியுள்ளது.

 
சிவா இயக்கி, அஜித் நடித்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் ‘வேதாளம்’. இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா…’ பாடல், படு பயங்கர ஹிட். இந்தப் பாட்டை எங்கு  கேட்டாலும், அப்படியே நின்று ஆடத் தோன்றும். கானா ரோகேஷ் எழுதிய இந்தப் பாடலை, அனிருத் பாடியிருந்தார். லண்டனைச் சேர்ந்த பிரபல பாடகர், பாடலாசிரியர் இன்னோ கெங்கோ. அனிருத் இசையமைத்த பாடல்களுக்கு மாஷ்-அப் கவர்  பாடி யூ-டியூபில் பிரபலமானவர்.
 
அனிருத் இசையமைப்பில் உருவான அஜித்தின் பிரபல பாடலான ‘ஆலுமா டோலுமா’வை எப்போது பாடப் போகிறீர்கள்? என்று  அவரிடம் கேட்டிருக்கிறார்கள். உடனே அந்தப் பாடலை ஆங்கிலத்தில் எழுதி, பாடியும் காண்பித்திருக்கிறார் இன்னோ கெங்கா. விரைவில் அந்தப் பாடல் வெளியாக இருக்கிறது.
அடுத்த கட்டுரையில்