அஜித் தலைமையில் நடக்கவிருக்கும் அப்புக்குட்டியின் திருமணம்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (18:26 IST)
அஜித் நடித்த வேதாளம், வீரம் மற்றும் தற்போது ’தல 57’ என்கிற படத்திலும் நடித்து வருபவர் சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டி. சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அஜித் சிவபாலனை வைத்து போட்டோ சூட் ஒன்றையும் நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது.


 


அப்புக்குட்டியின் உண்மையான பெயரான சிவபாலனையே பயன்படுத்துமாறும் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார் அஜித்.
 
இந்நிலையில், சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் புதிய வீடு கட்டி வரும் அவருக்கு ஊரில் பெண் பார்த்துள்ளார்களாம். அதனை அஜித்தின் தலைமையில் நடக்க வேண்டும் என கேட்டு கொண்டராம் அப்புக்குட்டி. அதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். விரைவில் அஜித் தலைமையில் சிபாலனுக்கு திருமணம் நடக்க போவதாக கோலிவுட் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்