அஜித் - சிவா கூட்டணியில் அடுத்த படம் தயார்!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (16:06 IST)
விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை சிவா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
வீரம், வேதாளம் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணியில்  கடந்த வாரம் விவேகம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும் சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் படம் வசூலில் தோல்வியடையவில்லை.
 
இந்நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் சிவா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்காவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. விரைவில் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த படத்தின் தலைப்பும் ‘வி’ என்ற வார்த்தையில்தான் தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
அஜித் நடிப்பில் சிவா இயக்கிய மூன்று படங்களும் ‘வி’ என்ற வார்த்தையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்