தனி ஒருவனில் அஜித் நடிக்கவேண்டியது… ஆனால்? – மனம்திறந்த இயக்குனர் !

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (15:34 IST)
நடிகர் அஜித்தை தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க இருந்ததாக இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

'ஜெயம்' படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான ராஜா தொடர்ச்சியாக ரீமேக் படங்களையே இயக்கி, ரீமேக் ராஜா என்ற பெயரை பெற்றார். ஆனால் அந்த கேலிகளை உடைத்து முன்னணி இயக்குனராக அவர் தன்னை மாற்றிக்கொண்டது தனி ஒருவன் படத்தின் மூலம்தான். ஜெயம்ரவியின் சினிமா வாழ்க்கையிலும் அந்தப் படம் முக்கியமானதொரு படமாக அமைந்தது.

ஆனால் எல்லோரையும் விட அந்த படத்தின் மூலம் அதிக பாராட்டுகளைப் பெற்றது அந்த படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமிதான். இந்த படம்தான் அரவிந்த் சாமிக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த இயக்குனர் மோகன் ராஜா ‘முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அஜித்தைதான் நினைத்து இருந்தேன். எல்லோரும் அவர் சிறப்பாக பொருந்துவார் எனக் கூறினர். ஆனால் என்னால் அதை செயல்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில் சுதீப் மற்றும் மேலும் சில நடிகர்கள் கூட மனதில் வந்தனர்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்