மீண்டும் இணைகிறதா அஜித், வினோத், போனிகபூர் காம்போ?

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (19:57 IST)
மீண்டும் இணைகிறதா அஜித், வினோத், போனிகபூர் காம்போ?
அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் இதே காம்போ தற்போது வலிமை படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் அஜீத், வினோத் மற்றும் போனிகபூர் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக கோலிவுட்டில் வதந்தி கிளம்பி வருகிறது. இந்த வதந்தியை தங்களுக்கு தாங்களே பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொள்பவர்கள் யூடியூப் சேனல்கள் கிளப்பி வருகின்றனர் என்பதும், இதே குரூப்பினர் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோகுல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அஜீத் நடிப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அஜித்தின் நெருங்கிய வட்டாரங்களில் இது குறித்து பேசிய போது மீண்டும் ஒருமுறை எச்.வினோத் உடன் அஜித் இணையும் வாய்ப்பே இல்லை என்றும் அதே போல் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது முன்னணி நிறுவனம் ஒன்று என்றும் போனிகபூர் இல்லை என்றும் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்