தல அஜித்தின் ‘மங்காத்தா’ 10 வருடம்: காமன் டிபி போஸ்டர் வெளியீடு

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (18:56 IST)
தல அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியான நிலையில் நாளையுடன் இந்த படம் 10 வருடம் நிறைவு செய்கிறது. இதனை அடுத்து அஜீத் ரசிகர்கள் இது குறித்த காமன் டிபி போஸ்டரை வெளியிட்டு இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் 
 
அஜித் படங்களிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று மங்காத்தா என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது பத்தாவது ஆண்டை வெகு சிறப்பாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் 
 
இந்த கொண்டாட்டத்தின் இடையில் இயக்குனர் வெங்கட்பிரபு மங்காத்தா 2 படத்தை இயக்க முயற்சிப்பேன் என்றும் அஜித்தை நிச்சயமாக சந்தித்து மங்காத்தா 2 படத்தின் கதையை கூறுவேன் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்