ராஜா ராணி கெட்டப்பில் அஜித் & ஷாலினி – இதுவரை வெளியாகாத புகைப்படம்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (10:59 IST)
நடிகர் அஜித் தனது மனைவியுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா நடிகர்களின் எவர்க்ரீன் ரியல் லைஃப் தம்பதிகளில் அஜித் ஷாலினிக்கு எப்போதும் இடமுண்டு. கடந்த சில ஆண்டுகளாக அஜித் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் அவ்வளவாக கலந்துகொள்வதில்லை. ஷாலினி மட்டுமே அவ்வப்போது தனது குழந்தைகளுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். அதனால் அஜித் ஷாலினி ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அதிகமாக வெளியாவது இல்லை.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் ஷாலினியோடு ஆங்கிலேயே நாட்டின் ராஜா ராணி போன்ற உடைகளை அணிந்துகொண்டு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளரான சிட்னி ஸ்லாடனும் இடம்பெற்றுள்ளார். இந்த புகைப்படம் அசல் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்