சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் அஜீத்

Webdunia
சனி, 18 ஜூலை 2015 (10:57 IST)
கிட்டத்தட்ட இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் முடிந்ததும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. 
 
கே.வி.ஆனந்த் சொன்ன கதை அஜீத்துக்குப் பிடித்திருப்பதாகவும், அதனால் உடனே அவர் இயக்கத்தில் நடிக்க சம்மதம் கூறியதாகவும் தகவல். 
 
ஆனால், இந்தத் தகவலை சத்யஜோதி நிறுவனமோ, அஜீத் தரப்போ இல்லை கே.வி.ஆனந்தோ இன்னும் உறுதி செய்யவில்லை.