தல அஜித் நடித்து வரும் 57வது படமான 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடியவுள்ள நிலையில் 'தல 58' படத்தின் இயக்குனர் குறித்த பேச்சு கோலிவுட்டில் அடிபடுகிறது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஒரு வரலாற்று படத்தில் நடிப்பார் என்றும், வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மங்காத்தா 2' படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அஜித், மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பெல்ஜியத்திற்கு விமானத்தில் அஜித்துடன் சென்றபோது சிறுத்தை சிவா ஒரு செண்டிமெண்ட் கலந்த குடும்பக்கதை ஒன்றை கூறியதாகவும், அந்த கதையை கொஞ்சம் மாற்றினால் தான் நடிக்க தயார் என்று அஜித் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
எனவே சிறுத்தை சிவா சென்னை திரும்பியதும் அஜித் கூறியபடி கதையில் சில மாற்றங்கள் செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. சிறுத்தை சிவா மீண்டும் அஜித் படத்தை இயக்கினால், அது ஹாட்ரிக் வெற்றி படமாக அமையும் என்று கருதப்படுகிறது. அஜித்தை நீண்ட இடைவெளிக்கு பின்னர் மசாலா, க்ரைம், ஆக்சன் இல்லாத குடும்பப்படம் ஒன்றில் காண வெகுநாட்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.