க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று கொண்ட தமிழ் நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:13 IST)
க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று கொண்ட தமிழ் நடிகை:
கடந்த சில மாதங்களாக திரையுலக பிரபலங்கள் இடையே கிரீன் இந்தியா சாலஞ்ச் பரவி வருவது தெரிந்ததே. தளபதி விஜய் உள்பட பல முன்னணி நடிகர்கள் இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டதும், தங்கள் வீடுகளில் செடிகளை நட்டனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வந்தன என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் பிரபல தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த கிரீன் இந்தியா சேலஞ்ச தற்போது வந்துள்ளது. சுஷாந்த் என்ற பிரபல தெலுங்கு நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த சேலஞ்சை அனுப்பி உள்ளார் 
 
இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வீட்டு தோட்டத்தில் 3 செடிகளை நட்டு அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் தான் இந்த சேலஞ்சை தனது ரசிகர்கள் அனைவருக்கும் கொடுப்பதாகவும் ரசிகர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு செடியை நட வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்