அமெரிக்கா சென்று திரும்பிய மகன்களை கட்டியணைத்த ஐஸ்வர்யா

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (15:21 IST)
தனுஷுடன் அமெரிக்கா சென்று திரும்பிய தன் இரு மகன்களை கட்டி அணைத்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி முன்னர் பகிர்ந்திருந்தார். அதில் “இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ்” நடிக்கிறார் .

இதையடுத்து ஜூலை 22 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்போது அமெரிக்காவில் படத்தின் ப்ரிமீயர் படக்குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. அதில் நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரோடு கலந்துகொண்டார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில்,     நேற்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய தன் மகன் களான யாத்ரா, லிங்கா ஆகியோரை கட்டியணைத்து வரவேற்றார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,  சில  நேரங்களில் அவர்களின் அணைப்பு உங்களுக்கு தேவை எனப் பதிவிட்டுள்ளார்.
 
 சில மாதங்களுக்கு முன்  நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா  இருவரும் பரஸ்பரவ்ம் விவாகரத்து செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்