‘’தவறான பழக்கத்திற்கு அடிக்ட்…. தற்கொலைக்கு முயன்றேன்’’- நடிகர் ரோபோ சங்கர்

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (15:30 IST)
விஜய் தொலைக்காட்சியில் ''கலக்கப்போவது யாரு'' என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகி, இன்று வெள்ளித்திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.

சமீபத்தில் இவர் உடல் நலம்  நிலை பற்றி வதந்திகள் பரவிய நிலையில், யூடியூப் சேனல்களுக்கு இதுபற்றி அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் எஸ்.ஆர்.எம். டெண்டல் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தன் உடல் நிலை பற்றிய வதந்திகளுக்கு அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

 சினிமாவுக்காக என் உடல்எடையைக் குறைத்து  இளைத்தேன் . மஞ்சள் காமாலை நோயால் பாதிகப்பட்டேன். அதற்கு காரணம் என்னிடம் இருந்த  சில பல பழக்கங்கள்.   அதற்கு அடிக்ட் ஆனதால், 5 மாதம் படுத்த படுக்கையாக இருந்தேன். சில கெட்ட பழக்கங்களால் நான் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து, தூக்கில் தொங்குவதற்கு முயன்றேன்.

இரவில் தூக்கம் கெட்டு தொந்தரவுக்கு ஆளானேன். ஜனவரி மாதம் அந்தப் பழக்கம் இல்லாமல் இருக்க முடியவில்லை. அப்போது, நக்கீரன் கோபால் சார் என்னை ஒரு மருத்துவமனையில் சேர்த்தபோதுதான், எனக்கு இருந்த மஞ்சள் காமாலை நோய் தெரிந்தது.

அன்று முதல் மருத்துவரின் ஆலோசனைப்படி கேட்டு , அன்றிருந்த பழக்கங்களை விட்டுவிட்டேன்,. இன்று ஆரோக்கியமான உணவுமுறைகள் உண்டு, உடற்பயிற்சிகள் செய்து ஆரோக்கியமாக இருக்கிறேன்,. குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் நாட்கள் செலவழிக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி. நான் மீண்டும் கம்பேக் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்