வாழா என் வாழ்வை வாழவே... நண்பர்களோடு ஜாலி ட்ரிப் அடித்த ஸ்னேகா!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (13:02 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை இருந்தவர் சினேகா 2000ம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் 
குறிப்பாக அவர் நடித்த ஆட்டோகிராப், ஆனந்தம் போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். 

கடைசியாக பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்த ஸ்னேகா தனது உடல் எடையை குறைத்து ஓரளவிற்கு ஷேப் கொண்டுவந்துவிட்டார். பருமன் ஆனாலும், இளமை மாறாத அழகில் அப்படியே இருக்கும் ஸ்னேகா தற்போது தனது கணவர் மற்றும் நண்பர்களுடன்  சேர்ந்து ஜாலி ட்ரிப் அடித்த புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்