நமது நாடு மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகம் உள்ள நாடு: நடிகை பார்வதியின் பதிவு..!

Siva
திங்கள், 22 ஜனவரி 2024 (14:26 IST)
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நாட்டின் பிரதமரே ராமர் கோயிலை திறந்து வைக்கலாமா என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன
 
இந்த நிலையில் நடிகை பார்வதி தனது சமூக வலைதளத்தில் நமது நாடு மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகம் உள்ள நாடு என்று பதிவு செய்துள்ளார். அவர் தனது பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

ALSO READ: குடிதண்ணீரில் இருந்த எலிமருந்து பாக்கெட்.. 13 வயது தூத்துகுடி சிறுவன் பரிதாப பலி:
 
இந்திய அரசின் ஜனநாயக தன்மையை வலியுறுத்தி, இந்திய மக்களுக்காக அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.  இறையாண்மை, சோசியலிஸ்ட், மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு, நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தேச ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவைகளை கடைப்பிடிக்கும் நாடு நம் நாடு.
 
இந்த பதிவை பல திரையுலக பிரபலங்களும் கனிமொழி எம்பி உள்பட சில அரசியல்வாதிகளும் பகிர்ந்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்