மெட்ராஸ் காரன் திரைப்படத்தில் நடிகையாக களமிறங்கும் சிரஞ்சீவியின் தம்பி மகள்!

vinoth

புதன், 7 பிப்ரவரி 2024 (13:42 IST)
பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம்,  இஷக், கும்பளங்கி ஆகிய மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் பலமுறை பல சர்ச்சைகளில் சிக்கி செய்தியாகியுள்ளார். சமீபத்தில் இவரும் மற்றொரு சக நடிகருமான ஸ்ரீநாத் பாஷி ஆகிய இருவரும் போதை பொருட்களை பயன்படுத்தி, ஷூட்டிங்குக்கு வந்து படக்குழுவினருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாக தயாரிப்பாளர் ரஞ்சித், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவற்றில் புகாரளித்திருந்தார்.

இதையடுத்து இருவரும் மலையாள நடிகர்கள் சங்கம் தடை விதிக்க முடிவு செய்தது. பின்னர் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு ஷேன் நிகம் இப்போது படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ஆர் டி எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது ஷேன் நிகம் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார். மெட்ராஸ்காரன் என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்குகிறார். படத்தில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். 

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹாரிகா நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்