ஜோசியர் அட்வைஸ் கேட்டு பெயரை மாற்றிக்கொண்ட நீலிமா... இப்போ லக் அடிக்குமா..?

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (15:14 IST)
தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்துவங்கும் சுவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் நீலிமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

'வாணி ராணி', 'தாமரை', 'தலையணை பூக்கள்' அரண்மனைகிளி' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். தனக்கு இருபது வயது இருக்கும் போதே இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்ட நீலிமாவிற்கு இசை என்ற மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் தற்போது நடிகை நீலிமா ராணி ஜோதிடர் ஒருவரின் அறிவுரையை கேட்டு தனது பெயரை மாற்றி ‘நீலிமா இசை’ என்று வைத்துக்கொண்டாராம். இது குறித்து கூறிய அவர், ஆம், நான்  ஜோதிடர் அறிவுரையின் படி என்னுடைய பெயரை நான் மாற்றி கொண்டேன்.  

"கருப்பங்காட்டு வலசு " என்ற புதிய படத்தில் கிராமத்தின்  பழைய பழக்க வழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் மாற்றும் மாடர்ன் பெண்ணாக நடித்துள்ளேன். இப்படத்தை செல்வேந்திரன் இயக்குகிறார் என கூறியுள்ளார். எனவே இந்த புது படத்திற்காக அவர் பெயரை மாற்றிக்கொண்டாராம். இந்த படம் ஹிட் அடுத்து பெரிய லக் நீலிமா இசைக்கு கொடுக்கிறதா என பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்