லாக்டவுனில் சிலம்பம் கற்றுக்கொண்ட தேனடை மதுமிதா - வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (10:42 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தன் மூலம் பிரபலமானவர் மதுமிதா. அந்த படத்தில் அவரை சந்தானம் ஜாங்கிரி, தேனடை என்று அழைத்தார். இதனாலே அவர் ஜாங்கிரி மதுமிதா என்று அழைக்கப்பட்டு அடையாளம் காணப்படுகிறார்.

ஒரு சில படங்களில் நடித்தாலும் குறுகிய காலத்திலே மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த மதுமிதா தனது உறவினரான மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சண்டை , பிரச்சனை, வாக்குவாதம் தற்கொலை முயற்சி என தொடர்ந்து பேசப்பட்டு வந்தார்.

இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த படியே சிலம்பம் சுற்ற கற்றுக்கொண்டுள்ளார் மதுமிதா. இந்த வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டு பாண்டியன் மாஸ்டர் தான் தனது குரு என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்