தமிழ் பொண்ணு... கொள்ளை அழகில் ரசிகர்களை கூறுபோடும் ஆண்ட்ரியா!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (15:26 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில் அழகிய சேலை உடுத்தி சிம்பிள் லுக் பியூட்டியாக போஸ் கொடுத்த புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, "தமிழ் பொண்ணு" என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரும் உருகி வழிந்து லைக்ஸ், கமெண்ட்ஸ் செய்துள்ளனர். மேலும், இது வடசென்னை 2 கெட்டப்பா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்