கட்டிப்பிடிக்க முயன்றார் .. அவருக்கு என் அப்பா வயது - நடிகை மீ டூ புகார்

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (16:21 IST)
தனது அப்பா வயது இயக்குனர் தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றாதாகவும், தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் நடிகை பிரெர்னா கண்ணா புகார் கூறியுள்ளார்.

 
நாடெங்கும் மீ டு புகார்கள் பற்றி எரிகிறது. குறிப்பாக கோலிவுட், பாலிவுட் கதாநாயகிகள், பெண் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பல பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து மீ டூ ஹேஷ்டேக்கில் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில், தெலுங்கில் சில படங்களில் நடித்தவரும், தமிழில் வெறென்ன வேண்டும் படத்தில் நடித்தவருமான பிரெர்னா கண்ணாவும் மீ டூ - வில் இணைந்துள்ளார். ஒரு முறை ஒரு படவாய்ப்புக்காக ஒரு இயக்குனர் என்னை ஹைதராபாத்திற்கு அழைத்தார். சிகப்பு நிற சேலையில், ஈரமான முடியுடன் 5 நட்சத்திர விடுதிக்கு வர சொன்னார். நான் என் அம்மாவுடன் சென்றேன். 
 
அப்போது, கண் மை இல்லாமல் என்னை பார்க்க வேண்டும் என அவர் கூற, அதை அழிப்பதற்காக கழிவறைக்கு சென்றேன். அப்போது என் பின்னால் வந்த அவர் திடீரென என்னை கண்ணாடியை நோக்கி தள்ளியவாறு முத்தமிட முயன்றார். நான் மிகவும் பயந்துவிட்டேன். இருப்பினும் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன். அதன் பின் அவர் என்னை மிரட்டத் தொடங்கினார். அவருக்கு என் அப்பா வயது. என் வயதில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
 
அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ் பட இயக்குனர் என்னை தொடர்பு கொண்டு, அவர் விருப்பப்படி நடந்து கொண்டால் வாய்ப்பு தருவதாக கூறினார். அவரை கண்டபடி திட்டி விட்டேன் எனக்கூறி பாலியல் புகார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்