என் வளர்ச்சிக்கு காரணம் நடிகர் விஜய்- அட்லீ

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (12:45 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லீ. இவர், ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இப்படத்தை அடுத்து,  பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கியிருந்த ஜவான் படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, ரூ.600 கோடிக்கு மேல் வசூல் குவித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் இருந்து இந்திக்கு சென்ற அட்லீ இனி அங்கு முன்னணி நடிகர்களை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில், நடிகர்கள் விஜய், ஷாருக்கான் இடையே ஒருவரை தேர்வு செய்வது மிகவும் கடினமானது. ஒருவர் மனைவியைப் போல ஒருவர் தாயைப் போல எனவே ஒருவரை விட்டுவிட்டு இன்னொருவரை தேர்வு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் நடிகர் விஜய் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்