பிகில் படத்தில் தளபதி வெறியன் - சற்றுமுன் கிடைத்த தகவல்!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (11:51 IST)
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவிருக்கிறார். சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்  நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் 2020ம் ஆண்டின் கோடைவிடுமுறை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 
பிகில் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அடுத்த படத்தின் அப்டேட் வந்ததால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். மேலும் அடிக்கடி இப்படத்திற்கான ஃபேன் மேட் போஸ்டர்களை தயாரித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்தது.  விக்ரம் வேதா , பேட்ட போன்ற படங்களில் வில்லனாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் சேதுபதி தளபதி 64ல் வில்லனாக நடிக்கவுள்ளதாக நேற்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்தது. 


 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தில் நடிகரும் விஜய்யின் தீவிர ரசிகருமான சந்தனு நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  நடிகர் விஜய் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க அவரது மாணவராக சாந்தனு  நடிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கூடிய விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்