இந்தியன் 2 எல்லாம் ஒரு படமா?... இயக்குனர் ஷங்கர் தூங்கிவிட்டாரா?- பிரபல நடிகர் கிண்டல்!

vinoth

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (08:30 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்தது. படத்தின் பலக் காட்சிகளை பகிர்ந்து அதை ரசிகர்கள் ட்ரோல் செய்யுமளவுக்கு சென்றது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்றது.

மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. அதே போல படம் ஓடிடியில் ரிலீஸான போதும், அதிகளவில் ட்ரோல்கள் வெளிவந்தன. இதனால் இந்தியன் 3 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மங்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சரண் ராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது இந்தியன் 2 படம் தனக்குப் பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். அதில் “இந்தியன் 2 படம் பார்த்தேன். என்ன எடுத்து வச்சிருக்காங்க? இயக்குனர் ஷங்கர் என்ன தூங்கிவிட்டாரா?.. ஷங்கர் படத்தில் இந்தளவுக்கு மோசமாக எப்போதுமே இருந்ததில்லை. குறைந்த பட்சம் அவர் படத்தில் பாடல்களாவது நன்றாக இருக்கும். இதில் எதுவுமே நல்லா இல்லை.” என வெளிப்படையாக விமர்சித்துள்ளார். சரண் ராஜ் இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜெண்டில் மேன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்