முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த சந்தானம்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (19:19 IST)
பிரபல நடிகர் சந்தானம் முதலமைச்சரை சந்தித்து வைத்த கோரிக்கையை முதல்வர் ஏற்றுக் கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது என்பதும் இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையே அவர் புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தானம் சந்தித்ததாக தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த சந்திப்பின்போது தன்னுடைய படத்தின் முழு படப்பிடிப்பும் புதுவையில் நடைபெறுவதால் படப்பிடிப்பிற்கு முழு ஒத்துழைப்பு புதுவை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்றும், சந்தானத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட புதுவை முதல்வர் ஏற்றுகொண்டு, தனது அரசு அனைத்து படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதி அளித்துள்ளார் 
 
மேலும் புதுவையில் நடைபெறும் படப்பிடிப்பில் கட்டணத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்