வரி குறித்த ரஜினியின் ட்வீட்டுக்கு நன்றி தெரிவித்த நடிகர் கமல்

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (16:18 IST)
மத்திய அரசின் ஜிஎஸ்டி சினிமாத்துறைக்கு 28 சதவீத வரி விதித்துள்ளது. அதோடு, கேளிக்கை வரியை 30 சதவீதமாக உயர்த்தியது தமிழக அரசு. மொத்தம் 58 சதவீத வரி மிகவும் அதிகம் என தமிழ் சினிமாத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர் திரையரங்கை 2 நாட்களாக மூடி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இதுவரை இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், அவர்  தனது டிவிட்டர் பக்கத்தில் “ சினிமாத்துறையில் இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை மனதில் கொண்டு, எங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 
அதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜிஎஸ்டி வரி குறித்து பதிவு செய்திருந்தார்.



 
ஜிஎஸ்டியின் வரி பற்றி கருத்து பதிவிட்ட ரஜினியின் ட்வீட்டிற்கு கமல்ஹாசன் நன்றி கூறியதோடு, முதலில் ஒரு  ஜென்டில்மேனாக கோரிக்கையை வைப்போம், பிறகு பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்