தடுத்து நிறுத்திய போலீஸார்..ரியல் ஹீரோவாக மாறிய வில்லன் நடிகர் !

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (23:29 IST)
நடிகர் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தில் நடித்து, பின் அருந்ததி படத்தின் புகழ்பெற்றவர் நடிகர் சோனு சூட். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல பல்வேறு உதவிகளை தனது சொந்த செலவில் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று பாந்த்ரா டெர்மினல் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேசம் ஷராமிக் சிறப்பு ரயில் புறப்பட இருந்தபோது, அம்மாநில தொழிலாளர்களைக் காண நடிகர் சோனு சூட் சென்றார்.

அப்போது பணியில்  போலீஸார் சோனுசூட்டை தடுத்து, வெளிமாநில தொழிலாளர்களைச் சந்திக்க விடாமல் அனுமதி மறுத்தனர்.

பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில்,என்னுடைய செயலில் அரசியல் இல்லை, உண்மையான அன்பினால் அவர்களை சந்திக்கச் சென்றேன். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் வரை எனது பணியை செய்வேன் என கூறியுள்ளார்.

அம்மாநில ஆளும்கட்சியான சிவசேனா, சோனு சூட் பின்னால் பாஜக இருப்பதாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்