போன வாரம் ரிலீஸ் ஆகியிருந்தால் சூப்பர் ஹிட்! ஆனால் இனிமே வந்தா பிளாப்தான்

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (22:06 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராகவும், ஓவியாவால் காதலிக்கப்பட்டவருமான ஆரவ் நடிக்கும் திரைப்படம் 'மீண்டும் வாஅருகில் வா'. இந்த படம் கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்த 'வா அருகில் வா' என்ற படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்



 
 
இந்த படத்தில் ஆரவ்வுடன், 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தில் நடித்த சந்தோஷும் இரண்டு ஹீரோக்களாக நடித்துள்ளனர். . ஜெ.ஜெய ராஜேந்திர சோழன் இயக்கியுள்ள இந்த படத்தில் புதுமுகம் சாராதேவா நாயகியாக நடித்துள்ளார்.
 
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியால் புகழ் பெற்றதாலும், ஓவியாவின் காதலன் என்று கூறப்பட்டதாலும், இந்த நேரத்தில் இந்த படத்தை வெளியிட்டால் படம் நல்ல வசூலை அடையும் என தயாரிப்பாளர் நினைத்தார். அவர் நினைத்ததும் சரிதான், ஆனால் இந்த படம் போன வாரம் வந்திருந்தால் சூப்பர் ஹிட்
 
ஆனால் அதற்கு நேர்மாறாக இந்த படத்தின் ரிசல்ட் ஆகும்போல் தெரிகிறது. ஓவியாவை வேண்டுமென்றே வெறுப்பேற்றும் ஆரவ்வை தற்போது ஓவியா ஆர்மியினர் உள்பட அனைவரும் எதிரிகளாக பார்க்கின்றனர். எனவே இந்த படம் வந்தால் அதற்கு சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய எதிர்ப்பை தெரிவிக்க ஓவியா படையினர் தயாராகி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்