லண்டன் திரைப்பட விழாவில் ”ஆறடி” – தமிழ் சினிமாவின் புதிய முயற்சி!

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (11:25 IST)
தமிழ் சினிமாவின் புதிய முயற்சியான “ஆறடி” திரைப்படம் லண்டனில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது.

உலகளாவிய திரைப்படங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் சிகேஎஃப் சர்வதேச திரைப்பட விழா அக்டோபர் லண்டனில் நடைபெற்றது. துருக்கி, ஈரான், சிங்கப்பூர், அமெரிக்கா என உலக நாடுகள் அனைத்திலுருந்தும் பரிந்துரைக்கப்பட்ட படங்களில் இருந்து அதிகாரப்பூர்வமாக சில படங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியாவிலிருந்து ஆறடி மட்டுமே தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் வெட்டியான் ஒருவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான ஆறடி திரைப்படத்தை இயக்கி, படத்தொகுப்பும் செய்திருக்கிறார் சந்தோஷ். டிவி தொகுப்பாளினி தீபிகா ரங்கராஜ் பெண் வெட்டியானாக தனது அபார நடிப்பு திறமையை காட்டியிருந்தார். சிறந்த நடிகைக்கான சிகேஎஃப் விருதுக்கு தீபிகா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜகமன்பூரில் நடைபெறும் 3வது ஆண்டு கே ஆசிப் சாம்பல் சர்வதேச திரைப்பட விழாவில் ஆறடி தேர்வாகியுள்ளது. தமிழகத்திலிருந்து ஆறடி மட்டுமே இந்த விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க்கது. பல்வேறு திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டு உலகளாவிய அங்கீகாரம் பெற்ற ஆறடி திரைப்படத்தையும், அதன் பட குழுவினரையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்