சிம்புவின் 'AAA' படத்திற்கு ஏற்பட்ட திடீர் சோதனை

Webdunia
சனி, 17 ஜூன் 2017 (06:46 IST)
சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தின் முதல் பாகம் வரும் 23ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் நேற்று சென்சார் அதிகாரிகள் பார்க்கப்பட்டது.



 


இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வரவுள்ளது. எனவே தான் தமிழக அரசின் வரிவிலக்கை பெறுவதற்காக அவசர அவசரமாக ஜூன் இறுதிக்குள் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்திருந்தார். ஆனால் 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது அவருக்கு பெரும் சோதனையாக அமைந்துள்ளது.

மேலும் இந்த படம் 139 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 19 நிமிடங்கள் ஓடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு, ஸ்ரேயா, தமன்னா, சனாகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்