பிரபல காமெடி நடிகர் ஆடுகளம் முருகதாசுக்கு இரட்டை குழந்தைகள்

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (23:29 IST)
தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் அறிமுகமாகி பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து கலக்கி வரும் முருகதாசுக்கு இன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண், பெண் என ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றார் முருகதாசு



 


இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘ஹாய் நண்பர்களே நான் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். கடவுள் அருளால் எனது குடும்பத்தில் ஆணொன்றும், பெண்ணொன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்’ என மகிழ்ந்துள்ளார் முருகதாஸ்.

விசாரணை, ஆடுகளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள முருகதாசு தற்போது நான்கு திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்