சமீபத்தில் காலமான பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. எஸ்பிபி நினைவை போற்றும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், தாதா சாகேப் விருது வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளனர். இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதும் புதுவை முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ அமைக்கப்படும் என நடிகர் ராதாரவி தலைமையில் நடைபெற்ற டப்பிங் யூனியன் செயற்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு குழு 30.09.2020 அன்று டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி அவர்களின் தலைமையில் கூடி, எஸ்பிபி அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டது.
மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும் என ராதாரவி தெரிவித்தார்