69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா.....

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (19:35 IST)
69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும்  விழா இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு  கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி  தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தது. அதன்படி, இந்திய மொழிகளில் வெளியாகும் சினிமாவில் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த இசையமைப்பாளர், திரைப்படம் ஆகிய பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று டெல்லியில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தலைமையில்  கடந்த 2021 ஆம் ஆண்டிற்காக தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா   நடைபெற்று வருகிறது. விருதாளர்களுக்கு அவர் தேசிய விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறார்.

இதில், புஷ்பா படத்தில்  நடித்த அல்லு அர்ஜூனன், கடைசி விவசாயி படத்தில் நல்லாண்டி ஆகியோர்  சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். சிறந்த நடிகைகளுக்கான விருதை கீர்த்தி சனோன்(மிமி) மற்றும் ஆலியா பட் (கங்குபாய் கத்தியவாடி)ஆகியோர் பெற்றனர்.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஆர்.ஆர்.ஆர்.படத்திற்கு இசையமைத்த கீரவாணிக்கும், புஷ்பா படத்திற்காக தேவிஸ்ரீ பிரசாத்திற்கும், கருவறை படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த பின்னணி பாடகிக்காக விருதை இரவின் நிழல் படத்தில் மாயவா பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு வழங்கப்பட்டது. சிறந்த படத்திற்கான விருது மாதவன் இயக்கிய ராக்கெட்டரி படத்திற்கு வழங்கப்பட்டது.

இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்