2.0 கலெக்சன் 4 வாரம் முடிவில் வெளிநாடுகளில் இவ்வளவா?

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (09:36 IST)
லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சயக்குமார் நடிப்பில் வெளியான படம் 2.0. இதில் இந்திய படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் மற்றும் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது. 
 
செல்போன் கதிர்வீச்சு எத்தகைய ஆபத்தை இந்த உலகத்துக்கு வழங்கி இருக்கிறது என்பதை ஷங்கர் காட்டி இருப்பார். தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான இப்படம் இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 
 
இந்நிலையில் 2.0 படம் வெளியாகி 4 வாரத்தை தொட்ட நிலையில், அமெரிக்காவில் மட்டும் 38.15 கோடி வசூலாகி உள்ளது. இங்கிலாந்தில் 6.55 கோடியும், ஆஸ்திரேலியாவில் 6.85 கோடியும், நியூசிலாந்து நாட்டில் 1.43  கோடியும் வசூலித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்