ராதிகாவின் 43 வருட விழாவை கொண்டாடிய ஹரி படக்குழு!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (22:07 IST)
ராதிகாவின் 43 வருட விழாவை கொண்டாடிய ஹரி படக்குழு!
பிரபல நடிகை ராதிகா நடித்த முதல் திரைப்படம் வெளியாகி 43 ஆண்டுகள் ஆனதை அடுத்து இது குறித்த விழா ஒன்றை ஹரி இயக்கும் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்
 
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ராதிகா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் கடந்த 1978ஆம் ஆண்டு ராதிகா நடித்த முதல் திரைப்படம் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. இதனை அடுத்து இந்த படம் வெளியாகி 43 ஆண்டுகள் ஆனதை அடுத்து படக்குழுவினர் இதனை கொண்டாட்டினர். இந்த கொண்டாட்டத்தின்போது ராதிகா பிரம்மாண்டமான கேக் வெட்டி படக்குழுவினர்களுக்கு பகிர்ந்தார் 
 
இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராதிகா கடந்த 43 ஆண்டுகளாக கதாநாயகி, குணசித்திர வேடம் உள்பட பல்வேறு வேடங்களில் நடித்து வந்துள்ளார் என்பதும் இன்றைக்கும் பிஸியான நடிகையாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்