பிரபுதேவா நடிக்கும் படப்பிடிப்பில் கத்திக் குத்து!

Webdunia
ஞாயிறு, 29 ஜூலை 2018 (19:06 IST)
பாண்டிச்சேரி வில்லியனூரில் நடைபெற்ற தமிழ் திரைப்பட படப்பிடிப்பின் போது ஒரு தொழிலாளி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
பாண்டிச்சேரி மாநிலம் வில்லியனூர் கோவிலில் அடிக்கடி படப்பிடிப்பு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று ஒரு தமிழ் திரைப்படத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. 
 
திரைப்பட தொழிலாளர்களுக்கு அருகில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் உணவு வழங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பை பார்க்க வந்த இரண்டு பேர் தங்களுக்கும் உணவு வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் உணவு பரிமாற மறுக்கப்பட்டுள்ளது.
 
இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் வாழை இலையை நறுக்க வைத்திருந்த கத்தியை வைத்து உணவு பரிமாறி கொண்டிருந்த ஊழியரை குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த ஊழியர் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கத்தியால் குத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், பிரபுதேவா, கேதரின் தெரசா ஆகியோர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்