ரூ.450 கோடி பட்ஜெட், ஆனால் உதவி இயக்குனருக்கு சம்பள பாக்கி: 2.0 படத்தின் பரிதாபம்

சனி, 21 அக்டோபர் 2017 (12:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் பிரமாண்டமான திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இரவுபகலாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு இதுவரை ரூ.400 கோடி வரை செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், படம் முடியும்போது இந்த படத்தின் பட்ஜெட் ரூ.450 கோடியை தாண்டிவிடும் என்றும் கூறப்படுகிறது.



 
 
ஆனால் இத்தனை பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகின்ற போதிலும் உதவி இயக்குனருக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.
 
ஆனால் ஷங்கரின் உதவி இயக்குனரான முரளி மனோகர் என்பவர் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
முரளி மனோகர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
 
இனி காத்திருப்பதில் அர்த்தமேயில்லை. '2.0' க்காக கடந்த டிசம்பரிலிருந்து டப்பிங்கின் முழுப் பொறுப்பேற்று நான், வேலை செய்து வருவது ஊடகவியலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் தெரியும். டப்பிங்கின் போது ரஜினி சார் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசியதும் செய்தியானது. செய்திக்காக எதையும் பரப்புவனல்ல நான்.
 
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மிகுந்த மன வேதனையுடன் இதைப் பதிவு செய்கிறேன்.
 
"கர்ப்பத்தில் ஐந்து மாதக் குழந்தையைச் சுமக்கும் என் மனைவி" - "என் மகன் மருதனுக்குக் காய்ச்சல்" என எவ்வளவோ மன்றாடியும் கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும் எனக்கு மட்டும் வழங்கப் படவில்லை. இந்த மாதமும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறேன். உண்மையைச் சொல்லியும், யாரிடமுமே எந்தப் பதிலுமில்லை.
 
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்