ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என எடப்பாடி தரப்பு அறிவித்தது. மேலும், கட்சியிலிருந்து தினகரனையும் விலக்கி வைத்தது. அதனையடுத்து, இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது.
அந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சென்னை எழிலகத்தில் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக் கமிஷனின் தலைவராக கடந்த செப்.30ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், இதுவரை விசாரணை தொடங்கப்படாமலேயே இருந்தது.
இந்நிலையில், ஜெ.வின் மரணம் தொடர்பான விசாரணை வருகிற டிச.25ம் தேதி தொடங்கும் எனவும், 3 மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.