இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் ஜிஎஸ்டி வசனத்திற்கு கமல்ஹாசன் உள்பட திரையுலகினர் அனைவரும் கருத்து கூறிவிட்டனர். பாஜகவுக்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் திரையுலகினர் கருத்து கூறி வரும் நிலையில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுகுறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த நிலையில் ரஜினியின் போலி டுவிட்டர் பக்கம் ஒன்றில் விஜய்க்கும் மெர்சல் படக்குழுவினர்களுக்கும், இயக்குனர் அட்லிக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி உண்மையாகவே மெர்சலுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டதாக ஒருசிலர் இந்த லிங்க்கை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் ரஜினி இன்னும் இந்த விஷயத்தில் மெளனமாக இருக்கின்றார் என்பதே உண்மை