உதவி இயக்குநருக்கு சம்பளம் கொடுக்காத ஷங்கர்

சனி, 21 அக்டோபர் 2017 (11:39 IST)
இயக்குநர் ஷங்கர், தன் உதவி இயக்குநருக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்ற விஷயம் தீயாய்ப் பரவி வருகிறது.

 
ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிபவர் முரளி மனோகர். பொதுவாக, தன்னுடைய உதவி இயக்குநர்களை மரியாதையாக நடத்துவார், அவர்களுக்கான சம்பளத்தை கரெக்ட்டாக கொடுத்துவிடுவார் என்றொரு பேச்சு  கோடம்பாக்கத்தில் உண்டு. ஆனால், கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என ஃபேஸ்புக்கில்  பதிவிட்டுள்ளார் முரளி மனோகர்.
 
“இனி காத்திருப்பதில் அர்த்தமேயில்லை. ‘2.0’ படத்திற்காக கடந்த டிசம்பரில் இருந்து டப்பிங்கின் முழுப் பொறுப்பேற்று  நான் வேலை செய்து வருவது அனைவருக்கும் தெரியும். டப்பிங்கின்போது ரஜினி சார் என்னிடம் தனிப்பட்ட முறையில்  பேசியதும் செய்தியானது.
 
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மிகுந்த மன வேதனையுடன் இதை எழுதுகிறேன். கர்ப்பத்தில் 5 மாத குழந்தையைச் சுமக்கும்  என் மனைவி, என் மகன் மருதனுக்கு காய்ச்சல் என எவ்வளவோ மன்றாடியும் கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும்  வழங்கப்படவில்லை. இந்த மாதமும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறேன். உண்மையைச் சொல்லி யாரிடமும் எந்தப்  பதிலும் இல்லை” என ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்