ஸாரிப்பா... உங்க ட்ராமா செல்லுபடியாகாது...

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2014 (12:02 IST)
கமலுக்கு நரம்பு தொடர்பான வியாதி, அதற்காகதான் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் என செய்தி காட்டுத்தீயாக பரவியது (அந்த தீயில் நாமும் கருகியது வேறு விஷயம்). ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று கமலே விளக்கமளித்துள்ளார்.
பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் ரிமோட் ஏரியாவில் நடந்து வருகிறது. அங்கு சரியான ஹோட்டல்கள் கிடையாது. சாலையோர கடைகளில் இருந்துதான் அனைவருக்கும் உணவும், தண்ணியும்.

மோசமான உணவினால் ஏற்பட்ட ஃபுட் பாய்சன் மற்றும் டிஹைட்ரேஷன் காரணமாகதான் மருத்துவமனைக்கு வந்தேன். இதை வைத்து சிலர் டிராமா போடுகிறார்கள். ஸாரி... அவர்கள் நினைக்கிற மாதிரி எனக்கு எதுவும் இல்லை என கமல் விளக்கமளித்துள்ளார்.