வெளிநாடுகளில் பிரமாண்டமாக வெளியாகும் அஞ்சான்

Webdunia
சனி, 9 ஆகஸ்ட் 2014 (13:50 IST)
அஞ்சான் படம் வெளிநாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக வெளியாகிறது.
ஈரோப்பில் மட்டும் 200 திரையரங்குகளில் அஞ்சானை கருணாமூர்த்தியின் ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் வெளியிடுகிறது. இதில் யுகே யில் மட்டும் திரையரங்குகளின் எண்ணிக்கை சுமார் 58. 
 
கோச்சடையான் மற்றும் ஜில்லா படங்கள் மட்டுமே இவ்வளவு அதிக திரையரங்குகளில் யுகே யில் வெளியாகியுள்ளன. அஞ்சான் அதனை சமன் செய்துள்ளது.
 
சென்னையிலும் படம் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னை சிட்டியில் (புறநகர் கிடையாது) சிவாஜி 17 திரையரங்குகளில் வெளியானதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. தற்போது அஞ்சான் 37 திரையரங்குகளில் வெளியாகிறது. இதுவொரு சாதனை என குறிப்பிடுகிறார் அபிராமி ராமநாதன்.
 
அஞ்சான் முன்பதிவிலும் சாதனை படைத்துள்ளது. இரண்டு மணி நேரத்தில் ஆன் லைன் புக்கிங்கில் அபிராமி மல்டிபிளக்ஸில் மட்டும் 5000 டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.