கத்திக்கு மாணவர்கள் ஆதரவு

Webdunia
சனி, 16 ஆகஸ்ட் 2014 (15:39 IST)
கத்தி படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் ராஜபக்சேக்கு நெருக்கமானது என்று கத்தி படத்தை வெளியிட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முற்போக்கு மாணவர் கழகம் என்ற மாணவர் அமைப்பும் கத்தியை எதிர்த்து போராடுவோம் என அறிவித்திருந்தது. 
இந்நிலையில் சென்னை கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கத்திக்கு ஆதரவு தெரிவித்து விஜய்யை சந்தித்தனர். அவர்கள் கத்தி திரைப்படம் வெளியாவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
 
மாணவர்கள் இரு அணிகளாக பிரிந்து நிற்பதால் கத்தி வெளியீட்டின் போது பிரச்சனை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.