வெறும் வாணலியில் ரவை,பொட்டுக்கடலை,முந்திரி,கசகசா இவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். தேங்காய்ப் பூ போடுவதாக இருந்தால் சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.இவை அனைத்தும் ஆறியதும் இவற்றுடன் சர்க்கரை,பொடித்த ஏலம் போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.இப்போது பூரணம் தயார்.
செய்முறை:
முதலில் மைதா மாவுடன் உப்பைப் போட்டு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும்.பூரி மாவுப் பதத்தில் இருக்க வேண்டும்.
இப்போது மாவிலிருந்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து பூரிக்குத் தேய்ப்பது போல் தேய்த்து அதை சோமாஸ் கரண்டியில் வைத்து தேவையான பூரணத்தையும் வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி கரண்டியை அழுத்தி மூட வேண்டும். கரண்டியை மூடிய பிறகு ஓரத்தில் உள்ள அதிகப்படியான மாவை எடுத்து விடவேண்டும்.இப்போது கரண்டியைத் திறந்து சோமாஸை எடுத்து மூடி வைக்கவும்.இது போலவே எல்லா மாவையும் போட்டு வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைத்து சோமாஸை ஒவ்வொன்றாகவோ (அ) எண்ணெய் கொண்ட மட்டும் போட்டு ஒருபுறம் சிவந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் சிவந்ததும் எடுத்து விடவும்.ஆறியதும் கண்ணாடி டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.