இறுதிச்சுற்றில் அறிமுகமாகி முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்று பெயர் வாங்கியவர் மல்யுத்த வீராங்கனையான ரித்திகா சிங். மணிகண்டனின் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்திருப்பவர், படம் வெளிவருவதை முன்னிட்டு பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.
ஆண்டவன் கட்டளை படம் பத்தி சொல்லுங்க...?
இறுதிச்சுற்றுக்கும் ஆண்டவன் கட்டளைக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கும். காக்கா முட்டை படத்தை இயக்குன மணிகண்டன் இயக்கியிருக்கார். நல்ல கதை. இதில் நான் ஒரு ரிப்போர்ட்டரா வர்றேன்.
விஜய் சேதுபதிக்கு என்ன வேடம்?
அவர் கிராமத்திலயிருந்து சென்னைக்கு வர்றவரா நடிச்சிருக்கிறார். அவர் சென்னையில சந்திக்கிற பிரச்சனைதான் கதை.
விஜய் சேதுபதி படப்பிடிப்பில் எப்படி நடந்து கொண்டார்?
அவர் ரொம்ப நல்ல மனிதர். கேமரா ஸ்டார்ட் ஆனதும் பக்கத்துல நின்னு நான் மறக்காமல் வசனம் பேச உதவினார். இந்தப் படத்தில் டயலாக் கேச அவர்தான் ரொம்பவும் உதவி செய்தார். கலகலப்பான ஆள்.
படப்பிடிப்பு அனுபவம் எப்படியிருந்தது?
ஜாலிதான். எனக்கு அவ்வளவா தமிழ் தெரியாது. அவங்க ஆங்கிலத்தில் பேசவே மாட்டாங்க. அதனால முதல்ல கொஞ்சம் சிரமம் இருந்திச்சி. அப்புறம் கொஞ்சம் தமிழ் பேச ஆரம்பிச்சேன். தமிழ் சேனல்கள் பார்த்துதான் தமிழ் கத்துகிட்டு வர்றேன்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கின சிந்துவை பேட்டி எடுக்க ஆசையிருக்கு. கடினமா உழைத்து இதை சாதிச்சிருக்கார். அவரால் இந்தியாவுக்கு பெருமை. அவரை பேட்டியெடுக்க முடிந்தால் சந்தோஷப்படுவேன்.
அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?
லாரன்சுடன் ஒரு படம் நடிச்சிட்டிருக்கேன். அப்புறம் இறுதிச்சுற்று ரீமேக் தெலுங்கில் வெங்கடேசுடன். அது சீக்கிரமே தொடங்கிடும்.
உங்க ரோல் மாடல்?
ஜோதிகா மேடம். அவங்க நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
எந்த தமிழ் ஹீரோவுடன் நடிக்க ஆசைப்படுறீங்க?
எல்லா முன்னணி ஹீரோக்களுடனும்தான். தனுஷ், மாதவன்னு அதுவொரு பெரிய லிஸ்ட்.