ரஜினியின் 170-வது படத்தை தயாரிக்கிறேனா போனி கபூர் விளக்கம்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (20:06 IST)
நடிகர் அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வருபவர் போனி கபூர்.பாலிவுட் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் ரஜினியின் புது படமொன்றை தயாரிக்க போவதாக தெரிவித்துள்ளார்.
 
அதாவது ரஜினியை வைத்து நெல்சன் திலீப் குமார் ரஜினிகாந்த்தின் 169 வது படத்தை இயக்குகிறார். அந்த படத்தை தொடர்ந்து  ரஜினியின் 170வது படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் அருண் ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்கப் போவதாகவும் இன்று தகவல்கள் பரவின.
 
இது குறித்து விளக்கம் கொடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர், " ரஜினிகாந்த் என்னுடைய நீண்ட நாள் நண்பராக இருந்து வருகிறார். வழக்கமாக நாங்கள் சந்திப்பதுடன், சினிமா குறித்த எங்களது கருத்துக்களை பரஸ்பரம் பகிர்ந்தும் வருகிறோம். 
ஒருவேளை நாங்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தால், அதனை நானே முதலில் அறிவிப்பேன். தற்போது வெளியாகியிருக்கும் தகவல் பொய்யானது எனவே இதை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்