யு.எ‌ஸ். ஒப‌ன்- கா‌லிறு‌தி‌யி‌ல் பெடரர், மு‌ர்ரே

புதன், 5 செப்டம்பர் 2012 (13:06 IST)
நியூயா‌ர்‌க்‌கி‌ல் நட‌ந்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் ஆ‌ன்டி மு‌ர்ரே ா‌யிறுதிக்கு முன்னேறின‌ர்.

நே‌ற்‌றிரவு நட‌ந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரர் சு‌வி‌ட்ச‌ர்ல‌ா‌ந்‌தி‌ன் ரோஜர் பெடரர், 23ம் நிலை வீரர் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் மார்ட் பிஷ்சை எதிர்கொள்ள இருந்தார். இருதய துடிப்பு பிரச்சனை காரணமாக மார்ட் பிஷ் போட்டியில் இருந்து விலகியதால் பெடரர் கா‌லிறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் பெடரர், தாமஸ் பெட்ரிச்சை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 6-4, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கனடாவின் மிலோச் ரானிச்சை தோற்கடித்து கா‌லிறுதிக்குள் நுழைந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் குரோஷிய வீரர் மரின் சிலிச் 7-5, 6-4, 6-0 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீரர் மார்ட்டின் கிசானை தோற்கடித்து கா‌லிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கால் இறுதியில் ஆன்டி முர்ரே-மரின் சிலிச் மோதுகிறார்கள்.

மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீரர் தாமஸ் பெட்ரிச் 7-6 (7-4), 6-4, 6-1 என்ற நேர்செட்டில் நிகோலஸ் அல்மாக்ரோவை ‌வீ‌ழ்‌த்‌தி ா‌லிறுதிக்கு தகுதி பெற்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்